என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விபத்து மரணம்"
ஆற்காடு:
ஆரணி கொசப்பாளையம் நரசிம்மன் தெருவை சேர்ந்தவர் பூபாலன் (வயது 45). ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்றிரவு வழக்கம் போல் பணி முடிந்து பைக்கில் வீடு திரும்பினார்.ஆற்காடு-ஆரணி சாலையில் உள்ள வணக்கம்பாடி அருகே சென்றபோது, எதிரே 3 பேர் ஒரே பைக்கில் தாறுமாறாக அதிவேகமாக வந்தனர்.
அவர்களது பைக் பூபாலன் வந்த பைக் மீது உரசியது. இதில் நிலைத் தடுமாறிய அவர் எதிரே வந்த காரில் மோதி தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த பூபாலன் சிகிச்சைக்காக ஆற்காடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பூபாலன் பலியானார்.
ஆற்காடு அடுத்த திமிரி துர்கம் ஜெயந்தி காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 40). ஓட்டலில் வேலை செய்துவந்தார். நேற்று இரவு திமிரி பஜாருக்கு பைக்கில் வந்துவிட்டு வீடு திரும்பினார். திமிரி பாலமுருகன் மலைக் கோவில் அருகே சென்றார். அப்போது எதிரே வந்த கார், பைக் மீது மோதியது. இதில் ராஜேந்திரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த 2 சம்பவங்கள் குறித்தும் திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடுமலை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 32). காய்கறி வியாபாரி. இவரது மனைவி கலைவாணி(27). இவர்களது மகள் ஹர்சினி(6). இவர்கள் 3 பேரும் பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல்லுக்கு குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட இன்று காரில் புறப்பட்டனர்.
காரை பொள்ளாச்சி மரப்பேட்டையை சேர்ந்த மனோஜ்குமார்(30) என்பவர் ஓட்டி சென்றார். மதியம் 12 மணியளவில் கார் மடத்துக்குளம்-உடுமலை ரோட்டில் கிருஷ்ணாபுரம் என்ற பகுதியில் சென்றது. அப்போது மடத்துக்குளத்தில் இருந்து உடுமலை நோக்கி ஒரு வேன் வந்தது.
கண் இமைக்கும் நேரத்தில் காரும், வேனும் நேருக்குநேர் மோதி விபத்தானது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி கலைவாணி, மகள் ஹர்சினி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.
டிரைவர் மனோஜ்குமார் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து பற்றி தெரியவந்ததும் மடத்துக்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான 4 பேரின் உடல்களையும் மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நடந்த காரை தொடர்ந்து உறவினர்கள் மற்ற 2 கார்களில் வந்தனர். அவர்கள் பலியானவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். #accident
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 54) கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி சென்ற வேன் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கந்தசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி தனலட்சுமி (45). இவர் நேற்று வீரகோவில் என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று தனலட்சுமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு தனலட்சுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி அடுத்துள்ள நாட்டாண்மை புரத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 48.) நிதி நிறுவன அதிபரான இவர் பைனான்ஷியல் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ஜோதி இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று மாலை கிருஷ்ணகிரி சாலையில் உள்ள சத்யா நகருக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பும்போது எதிரே வந்த கார் இவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் ஓட்டி வந்த டிரைவர் தலைமறைவாகி விட்டார். தர்மபுரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த தவமணி மகன் சீனிவாசன் (வயது20). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். மேலும் ராணுவத்தில் சேருவதற்காகவும் பயிற்சி எடுத்து வந்தார். அஞ்சுகுழிபட்டியில் தனது உறவினர் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.
சம்பவத்தன்று நத்தம் சாலையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த தனியார் பள்ளி பஸ் அவர் மீது மோதியது. படுகாயம் அடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரான கொசவப்பட்டியை சேர்ந்த ஜான்போஸ்கோ (35) என்பவரை கைது செய்தனர்.
ஜோர்பேட்டை:
வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை சேர்ந்தவர் மதியழகன்(வயது 24) ஆட்டோ டிரைவர் இவரது மனைவி ஜனனி (20) இவர்களுக்கு 1 மகன் உள்ளார்.
இந்நிலையில் மதியழகன் நேற்று இரவு நாட்டறம்பள்ளியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது குடியாலகுப்பம் என்ற இடத்தில் வந்த போது அங்கு சாலையின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின் பக்கம் மோதினார்கள் இதில் மதியழகன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு அஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துறையூர்:
திருச்சியில் இருந்து துறையூரை நோக்கி பால் பாக் கெட்டுகளை ஏற்றி கொண்டு ஒரு வேன் சென்றது. வேனை மண்ணச்சநல்லூர் அடுத்த அத்தாணி கிராமத்தை சேர்ந்த குருமூர்த்தி (வயது 30) என்பவர் ஓட்டினார். பெரமங்கலத்தை சேர்ந்த கதிரேசன் (22) என்பவர் கிளீனராக இருந்தார்.
வேன் திருச்சி-துறையூர் சாலையில் கரட்டாம்பட்டி அருகே சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி சாலை யோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் புலிவலம் போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி டிரைவர் குருமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்து புலி வலம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
துறையூரை அடுத்த நரசிங்க புரத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி வீரம்மாள் (49) செங்கல் ஏற்றி செல்லும் லாரியில் கூலிதொழிலாளி. நேற்று செல்லிபாளையம் என்ற இடத்தில் செங்கல் இறக்க சென்றார்.
பின்னர் ஒரு இடத்தில் செங்கல் இறக்கப்பட்டது. அப்போது லாரியை சிறிது தூரம் நகர்த்த வேண்டி இருந்தது. லாரியில் டிரைவர் செந்தில் இல்லாததால் ஒட்டம்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனக்கு லாரி ஓட்ட தெரியும் என்று கூறி லாரியை ஓட்டினார். அப்போது எதிர்பாராத விதமாக லாரி வீரம்மாள் மீது மோதியது. இதில் வீரம்மாள் உடல் நசுங்கி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
மேலூர்:
மேலூர் அருகே உள்ள கருங்காலக்குடியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 60), ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவ அலுவலர்.
இவர் இன்று காலை தனது ஸ்கூட்டரில், பெட்ரோல் பங்க் நோக்கிச் சென்றார். மதுரை-திருச்சி 4 வழிச்சாலையில் உள்ள அணுகு சாலையில் ராம மூர்த்தி சென்றார்.
அப்போது மேலூரில் இருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற தனியார் பஸ் அந்த வழியே வந்தது. அந்த பஸ் எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மீது மோதியது.
இதில் பஸ்சின் முன் சக்கரத்தில் சிக்கிய ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். தகவல் அறிந்த கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, ஏட்டு பரசுராமன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சுங்கச்சாவடி வாகன மீட்பு அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் வந்த குழுவினர் போக்குவரத்தை சீர்படுத்தினர்.
சோழவந்தான்:
சோழவந்தான் அருகே உள்ள மண்ணாடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகன் மாரநாடு (வயது 18). கம்பி கட்டும் கட்டிட தொழிலாளி.
இவர் தினமும் ஊரில் இருந்து மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு வேலைக்கு செல்வது வழக்கம். இன்று காலை 8 மணி அளவில் வீட்டில் இருந்து மாரநாடு புறப்பட்டார்.
திருவேடகம் பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்தபோது, எதிரே மணல் லாரி வந்தது. எதிர்பாராத விதமாக அந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மாரநாடு தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். அதற்குள் மாரநாடு பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான மாரநாடு பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால் மண்ணாடிமங்கலம் கிராமம் சோகத்தில் மூழ்கி உள்ளது.
செங்குன்றம்:
இன்று காலை புழல்- அம்பத்தூர் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார், தாறுமாறாக ஓடி 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி நின்றது. இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்தவர்கள் கீழே விழுந்தனர்.
எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் இருந்த ஒருவரும் படுகாயம் அடைந்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது.
தகவல் அறிந்ததும் செங்குன்றம் போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை சரி செய்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
அவருடைய பெயர் ராஜா (45). இவர் தனது மகன் பிரவீண்குமாரை (14) செங்குன்றத்தில் உள்ள ஒரு பள்ளியில் விடுவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தபோது தாறுமாறாக ஓடிய கார் மோதி பலியாகி விட்டார்.
மாணவர் பிரவீண்குமார் பலத்த காயத்துடன் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து இந்த விபத்தில் சிக்கியவர் புருசோத்தமன் (46). அம்பத்தூரைச் சேர்ந்த இவரும் படுகாயம் அடைந்து ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்.
காரை தாறுமாறாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் முருகன் (39) கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம் சுக்கா லியூரை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 70). இவரது மனைவி பழனியம்மாள் (வயது 65). இவர்கள் 2 பேரும் இன்று அதிகாலை 4 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வேலாயுதம்பாளையத்தில் உள்ள உறவினர்களை பார்க்க சென்றனர்.
கரூர்-சேலம் தேசியநெடுஞ் சாலையில் மூலிமங்கலம் பிரிவு ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே செல்லும் போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் சிதம்பரம் மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகிறார். விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அய்யம்பேட்டை:
தஞ்சை தெற்கு மனோஜிப்பட்டி சோழன் நகரைச் சேர்ந்தவர் முருகையன் (வயது 48). கட்டிட ஒப்பந்ததாரர்.
இவர் தனது நண்பர் தஞ்சை மேல மானோஜிப் பட்டி சண்முகானந்தம் (53) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கும்பகோணத்திற்கு சென்று விட்டு மீண்டும் தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை முருகையன் ஓட்டி வந்தார். இவர்கள் அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவில் தாழமங்கை கோவில் அருகே வந்த போது பின்னால் வந்த கார் மோதியது.இதில் முருகையன், சண்முகானந்தம் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகையன் இறந்து விட்டார்.சண்முகானந்தம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான கார் டிரைவரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்